குவைத்தில் முதல்கட்டமாக வருகிற கொரோனா தடுப்பூசி 5 சதவீதம் பேரும் போட முடியும்:
Dec-3,2020
குவைத்தில் முதல் கட்டமாக இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதம் பேருக்கு போட முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் கண்டுபிடித்த இந்த தடுப்பூசி டிசம்பர் நடுப்பகுதியில் குவைத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசியின் முதல்கட்டம் வயதானவர்கள், நீண்ட கால நோயாளிகள் மற்றும் முன்னணி சுகாதார பணியாளர்களுக்கு போடப்படும் . இந்த தடுப்பூசிகள் 18 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது, எனவே இந்த பிரிவுகள் தடுப்பூசியிலிருந்து விலக்கப்படுகின்றன.
முதல் கட்டத்திற்குப் பிறகு இரண்டாம் கட்டமாக நாட்டிற்கு வருகிற தடுப்பூசி நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 20 சதவீதம் பேருக்கு பயன்படுத்த முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக அதாவது நேற்று பிரதமர் ஷேக் சபா அல்-காலித் அல்-சபா தடுப்பூசி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் ,தடுப்பூசி போடுவது கட்டாயமாக போடவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கொரோனா தடுப்பூசி தேவைப்படுபவர்களுக்கு முன் அனுமதி மூலம் நேரம் ஒதுக்கப்படும். கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அடிப்படையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க இதற்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு சுகாதார மையங்களில் தடுப்பூசி மேற்கொள்ளப்பட வேண்டும். தடுப்பூசி ஒரு நபருக்கு இரண்டு கட்டங்களாக கொடுக்கப்படுகிறது. இரண்டாவது டோஸ் முதல் டோஸ் வழங்கப்பட்டு 3 முதல் 4 வாரங்களுக்கு பிறகு வழங்கப்படும், இதற்கான தேதி புதிதாக அறிமுகம் செய்யும் சிறப்பு பிரிவு மூலம் சம்மந்தப்பட்ட நபருக்கு நினைவூட்டப்படும்.
இந்த தடுப்பூசி முதியவர்கள், நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சுகாதார காரணங்களால் மையங்களுக்கு செல்ல முடியாத நபர்களுக்கு வீடுகளுக்கு வந்த இந்த சேவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இதற்காக, பொது சுகாதாரத் துறையின் 20 மொபைல் பிரிவுகளை அமைச்சு அமைத்துள்ளது. மற்ற தடுப்பூசிகளை போல,கொரோனா தடுப்பூசி பெறும் சிலர் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அதாவது தலைவலி, தசை வலி மற்றும் அதிக உடல் வெப்பநிலை ஆகியவை இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நீடிக்கும்.
தடுப்பூசி பெறுபவர்கள் அனைவருக்கும் சுகாதார அமைச்சகம் சிறப்பு சான்றிதழ் வழங்கும். எதிர்காலத்தில், இந்த சான்றிதழ் பி.சி.ஆர் சான்றிதழுக்கான மாற்று ஆவணமாக தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்த முடியும்.