குவைத்தில் இந்த 5000 பேருக்கு மனிதாபிமான அடிப்படையில் சலுகை வழங்கபடும்:
Dec-03,2020
குவைத்தில் விசிட்டிங் விசாவில் வந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு இந்த வாரத்தின் தொடக்கத்தில் முடிவடைந்த பின்னர், அவர்கள் விசாவை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக உள்ளூர் செய்தித்தாள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய முடிவு உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும், இதில் பயணக் கட்டுப்பாடுகள், விமானக் கட்டணங்களின் அதிகரிப்பு மற்றும் இப்படிபட்ட சில நபர்களுக்கு நோய்தொற்று தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிக்கை தெரிவித்துள்ளது.
விசிட்டிங் விசா காலாவதியான பிறகும் சுமார் 5,000 வெளிநாட்டினர் குவைத்தை விட்டு வெளியேறவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. முன்னர் விசிட்டிங் விசாவில் குவைத்தில் வந்தவர்கள் நவம்பர் 30 க்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்குப் பின் வருபவர்கள் ஒரு நாளைக்கு 2 தினார்கள் அபராதம் செலுத்த வேண்டும்.