குவைத்தில் 5-வயது பெண் குழந்தை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறிவிழுந்து பலி:
Dec-4,2020
குவைத்தின் கைத்தானில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள தனது தந்தையின் குடியிருப்பின் ஜன்னலில் இருந்து தவறி விழுந்து 5-வயது எகிப்து நாட்டைச் சேர்ந்த பெண் குழந்தை ஒருவர் உயிரிழந்தார்.
உள்துறை அதிகாரிகள் ஃபர்வானியா மருத்துவமனையில் இருந்து பெற்ற அறிக்கையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்த நேரத்தில் குழந்தை உயிரற்ற நிலையில் காணப்பட்டார் எனவும், தலையில் பலத்த காயங்கள் மற்றும் உடல் முழுவதும் எலும்பு முறிவுகள் இருந்தது என்று அறிக்கை வழங்கியுள்ளனர்.