உலகில் முதல் முறையாக 90-வயது பிரிட்டன் பாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது:
(Photo Credit: Jacob King)
Dec-08,2020
பிரிட்டன் நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணிக்கு இங்கிலாந்தின் கோவென்ட்ரியில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் வைத்து மார்கரெட் கீனன்(வயது-90) என்ற பாட்டிக்கு "ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட்-19" என்ற தடுப்பூசி போடப்பட்டது என்று அந்நாட்டு பத்திரிகைகள் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.
வரலாற்றில் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு தடுப்பூசியைப் பெற்ற உலகின் முதல் நபர்களாக இந்த பிரிட்டன் பாட்டி திகழ்வார். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வரவிருக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையை நினைவுகூறும் வகையில் Happy Christmas என்ற T Shirts அணிந்திருந்தார்.1.5 மில்லியன் மக்களைக் கொன்ற ஒரு தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முதல் படியாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது.
தடுப்பூசி பெற்ற பின்னர் டீன் கூறுகையில் கோவிட் -19 க்கு எதிராக போட்ட முதல் தடுப்பூசிப் பெற்ற நபராக நான் மிகவும் பாக்கியம் நபராக உணர்கிறேன் என்றார். வரவிருக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட ஆவலாக இருக்கிறேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார். மத்திய இங்கிலாந்தில் கோவென்ட்ரியில் திருமதி கீனன் வசித்து வருகின்றார்.