Dec-14,2020
குவைத்தின் அல்-ராய் பகுதியில் உள்ள ஒரு அலுமினிய மூலப்பொருளை கொண்டு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் அதிகாலை 6 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதை தகவலறிந்து Shuwaikh, Ardiyah, Sulaibikhat, Salmiya மற்றும் Al-Isnad பகுதிகளில் இருந்து விரைந்து வந்த 5 தீயணைப்பு குழுவினர் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.
மேலும் தீவிபத்து நடந்த கட்டிடத்தின் பக்கத்திலேயே உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலை, பல பட்டறைகள் மற்றும் பிறகட்டிடங்களில் தீ பரவாமல் தடுக்க முடிந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த பயங்கரமான தீ விபத்தில் உயிர் இழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை, பொருள்சேதம் மட்டுமே ஏற்பட்டது.