BREAKING NEWS
latest

Monday, December 21, 2020

சவுதியை தொடர்ந்து ஓமானும் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடியதாக அறிவிப்பு

Dec-21,2020

கொரோனா வைரஸின் புதிய வடிவம் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவிவரும் நிலையில், சவுதி பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இன்று அதிகாலையில் தங்கள் நாட்டின் எல்லைகளை  ஒருவார காலத்திற்கு  முதல்கட்டமாக மூடுவதாக அறிவித்தது.

இதையடுத்து கூடுதல் நாடுகள் தங்களின் வான்வழி உள்ளிட்ட அனைத்து எல்லைகளையும் மூடி வரு‌கிறது. இந்நிலையில் சவுதியை தொடர்ந்து,ஓமான் தங்கள் எல்லைகளை  மூடுவதாக சற்றுமுன் தங்கள் அதிகாரப்பூர்வமாக அரசு தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய வடிவம்  தீவிரமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை என்ற முறையில் இந்த புதிய முடிவு என்று உள்துறை அமைச்சக  அதிகாரிகள் தெரிவித்தனர், முதல்கட்டமாக ஓமானும் எல்லைகளை ஒரு வார காலத்திற்கு மூடியுள்ளது.

முன்னதாக சவுதி இன்று அதிகாலையிலேயே நிலம், கடல் மற்றும் வான்வழி எல்லைகளை மூடியிருந்தது, முதல்கட்டமாக ஒரு வாரம் எல்லைகள் மூடியுள்ளதாகவும்,தேவைப்பட்டால் மீண்டும் தடை நீட்டீக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட்டின் புதிய வடிவம் பல்வேறு நாடுகளில் பரவி வருவதாகவும், நாட்டில் உள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதி செய்வதை இதன் நோக்கம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Add your comments to சவுதியை தொடர்ந்து ஓமானும் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடியதாக அறிவிப்பு

« PREV
NEXT »