குவைத்தில் கடந்த டிசம்பர்-5 தேர்தல் நடந்த நிலையில், அடுத்த நாள் தேர்தல் முடிவுகள் வெளியானது. தொடர்ந்து அமீர் ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் ஜாபீர் அல் சபா பிரதமரை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் நேற்று(திங்கள்க்கிழமை) இரண்டு துணை பிரதமர் உட்பட 15 அமைச்சர்கள் முக்கிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து இன்று 16 வது குவைத் பாராளுமன்ற தொடக்கக் கூட்டம் நடைபெற்றது. சரியாக காலை 10 மணிக்கு அமீர் ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் ஜாபீர் அல் சபா இந்த நிகழ்வை துவக்கிவைத்தார்.தொடர்ந்து அமீர் பேசுகையி்ல் உங்களை(எம்.பி.க்களை) தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்புகளை மதிக்க வேண்டும் என்று அமீர் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கத்திற்கும்,தேசிய சட்டமன்றத்திற்கும் இடையிலான ஒத்துழைப்புடன் நாட்டை வளர்ச்சியடைய செய்யவும், இதை நடைமுறைப்படுத்த ஒரு அவசரகால சீர்திருத்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று அமீர் கோரிக்கை வைத்தார்.