குவைத் வானிலை ஆய்வு மையத்தின் தினசரி அறிக்கை:
குவைத் வானிலை ஆய்வு மையம் இன்று டிசம்பர்-1 வெளியிட்டுள்ள அறிக்கையில்....வானிலை மிதமானதாகவும் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் எனவும், காற்று வடகிழக்கு திசை நோக்கி மிதமான வேகத்தில் மணிக்கு 08 - 32 கி/மீ வீசும் என்றும், மேலும் பகல் நேரத்தில் சிதறிய அளவிலான மழை முதல் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
இரவைப் பொறுத்தவரை, குளிர் மற்றும் ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்த்தது, மேலும் காற்று மணிக்கு 06-22 கிமீ வேகத்தில் வீசும், அவ்வப்போது மழை பெய்யும், மூடுபனி உருவாக வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.
நாட்டின் பிராந்தியங்களுக்கு(இடங்களுக்கு) ஏற்ப பகலில் எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை 20 டிகிரி என்றும், இது இரவில் 14 டிகிரியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.