குவைத் வீட்டுத் தொழிலாளர் பிரிவில் உள்ளவர்கள் ஓட்டுநர் வேலைக்கு மாறுவதற்கு அனுமதி:
Dec-1,2020
குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்கள் பிரிவின் கீழ் எந்த வேலையிலுள்ள நபரும் ஓட்டுநர் வேலைக்கு மாறுவதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதாக பிரபல தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கு வீட்டுத் தொழிலாளர்கள் என்பது 20 நம்பர்(Article-20) விசாவில் உள்ளவர்களை குறிக்கிறது.
புதிய உத்தரவுப்படி, சொந்த நாடுகளில் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் கூட,ஒரே ஸ்பான்சரின் கீழ் இரண்டு ஆண்டுகள் பூர்த்தி செய்த பின்னர் முறையான குடியிருப்பு ஆவணங்கள் கைவசம் இருந்தால், அதே ஸ்பான்சரின் கீழ் ஓட்டுநர் வேலைகளுக்கு மாறலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்காக நிபந்தனைகள் என்ன என்பது குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவில்லை.
இது தொடர்பாக அறிவிப்பு குவைத்தின் ஆறு மாகாணங்களின் குடிவரத்துறை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளாத ரெசிடென்சி விவகார துறையின் இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் ஹமத் அல் தவாலைய தெரிவித்தாக செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக வீட்டுத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து துறைகளிலும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டுத் தொழிலாளர்கள் பிரிவில் பணிபுரிபவர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.