Dec-12,2020
குவைத்தை விட்டு வெளியேறி வருகின்ற வெளிநாட்டினரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது என்று ஆக்ஸ்போர்டு எகனாமிஸ்ட் அறக்கட்டளையின் ஆய்வின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. அறிக்கையின்படி, வளைகுடாவில் உள்ள வெளிநாட்டவர்களிடையே குவைத்தில் இருந்துதான் அதிகமாக அளவில் தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர்.
கோவிட்டின் தாக்கம் மற்றும் குவைத்திகளை பல்வேறு துறைகளில் புதிதாக வேலைக்காக அமர்ந்தும நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத்தை விட்டு ஏராளமான வெளிநாட்டவர்கள் வெளியேறி வருகின்றனர்.
ஒரு வருடத்தில் குவைத்தில் உள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையில் 12 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் இது ஒன்பது சதவீதம் குறையும் என்று மதிப்பிடப்பட்டது. தாயகம் சென்றவர்களில் பெரும்பாலான நபர்களின் விசா காலாவதியான நிலையில் திருப்பி குவைத்திற்கு வரமுடியாத நிலையும், கோவிட் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளித்து வெளிநாட்டவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரையில் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு எகனாமிஸ்ட் அறக்கட்டளையின் அறிக்கையின்படி, குவைத்தில் நிலவும் இந்த பிரச்சினை காரணமாக அதிக அளவிலான வெளிநாட்டவர்கள் மற்ற வளைகுடா நாடுகளுக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்புக்கு என்று தெரிவித்துள்ளது. குவைத்தில் குடிமக்களை வேலைக்காக அமர்த்துவதன் மூலம் நாட்டில் மக்கள் தொகை சமநிலை படுத்துவதற்காக பல்வேறுபட்ட அழுத்தங்கள் கொடுக்கபட்டு வருகின்றன நிலையில், பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு பல துறைகளில் நடைமுறைப் படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இவை அனைத்தும் நாட்டில் உள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இனிமுதல் புதிய விசாக்கள் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். மேலும் ஏற்கனவே குவைத்தில் உள்ளவர்கள் பலரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுவார்கள், சாதாரண வெளிநாட்டவர்கள் முன்காலங்களை போன்று இல்லாமல் நிதி ரீதியாக பிரச்சினைகள் காரணமாக தாங்களாகவே வெளியேறுவார்கள்.