குவைத்திற்கு திரும்பும் வீட்டுத் தொழிலாளர்களின் பயணச்சீட்டு முன்பதிவு துவங்கியுள்ளது:
Dec-2,2020
குவைத்தில் கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக திரும்புவதற்கு முடியாமல் தாயகத்தில் சிக்கித் தவிக்கும் வீட்டுப் பணியாளர்களை திருப்பி அழைத்துவர டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய ஸ்பான்சர்களிடமிருந்து(முதலாளிகள்) விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவித்துள்ளது என்று குவைத் செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு விண்ணப்பங்களை குவைத் ஏர்வேஸ்யின் தரை சேவை நிறுவனமான நாஸ் கையாளும் என்று செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் விமானங்களுக்கான பயணச்சீட்டு கட்டணம் 140 தினார்கள் முதல் 160 தினார்கள் வரையில் வரை இருக்கும். இதுவே பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களை அவர்கள் நாட்டிலிருந்து அழைத்து வருவதற்கு குவைத் ஏர்வேஸ் 200 கே.டி வரை கட்டணம் வசூலிக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
வீட்டுத் தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான முதல்கட்ட பணிகள் வருகிற டிசம்பர் 7 முதல் தொடங்கும். தாயகத்தில் சிக்கித் தவிக்கும் 80,000 வீட்டுத் தொழிலாளர்களில் பாதி பேர் ஒன்றரை முதல் இரண்டு மாதங்களில் குவைத்துக்குத் திரும்புவார்கள் என்று விமான இயக்குநரகம் தெரிவித்துள்ளது. வீட்டுத் தொழிலாளர்களின் தனிமைப்படுத்தல் மற்றும் பயணச் செலவுகள் ஸ்பான்சரின் செலவில் இருக்கும் என்றும் தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து குவைத்துக்குத் திரும்புவது தேசிய விமான நிறுவனங்களின் சேவைகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் முன்னரே சம்மந்தப்பட்ட துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.