Dec-14,2020
குவைத் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவல் அடிப்படையில் குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகியவை இந்தியாவில் இருந்து வீட்டுத் தொழிலாளர்களை இன்று திங்கள்கிழமை முதல் குவைத்திற்கு அழைத்துவரும். இதுவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் சேவை சென்னையில் இருந்து என்று சம்பந்தப்பட்ட துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாளைக்கு அதிகபட்சம் 600 பேரை அழைத்து வர அனுமதிக்கப்படுகிறது. முதல்கட்டமாக டெல்லி மற்றும் சென்னையிலிருந்து விமானங்கள் இயக்கப்படும். பின்னர் இது இந்தியாவின் 6 இடங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸிலிருந்து வீட்டுத் தொழிலாளர்களும் வரும் நாட்களில் குவைத் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு வார தனிமைப்படுத்தல், பி.சி.ஆர் சோதனை மற்றும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு உட்பட 270 தினார்கள் வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தவிர விமான டிக்கெட் விலை நாட்டிற்கு ஏற்ப மாறுபடும். இந்தியாவில் இருந்து டிக்கெட்டுகளுக்கு 110 தினார்களும், பிலிப்பைன்ஸிலிருந்து 200 தினார்களும், இலங்கை, நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து 145 தினார்களும் செலவாகின்றன. தாயகத்தில் உள்ள தங்கள் தொழிலாளர்களை திருப்பி குவைத்திற்கு அழைத்துவர ஸ்பான்சர்கள் பின்வரும் இணையதளத்தில் Link:https://belsalamah.com
விபரங்களை பதிவு செய்து அனுமதி பெற வேண்டும்