Dec-23,2020
குவைத்தின் நிலம்,கடல் மற்றும் வான்வெளி வழித்தடங்கள் மூடப்படுவதாக அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவு இன்னும் மாற்றப்படவில்லை என்றும், இந்த உத்தரவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முசாரம் தெரிவித்தார். தற்போது தடை ஜனவரி 1 நள்ளிரவு வரை நீடிக்கிறது.மேலும் அப்போதைய நிலைமையின் வெளிச்சத்தில் தற்போதைய முடிவு மதிப்பாய்வு செய்யப்படும் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.
மரபணு மாற்றம் ஏற்பட்ட கோவிட் வைரஸ் தீவிரமாக பரவுவதன் பின்னணியில் கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணி முதல் நாட்டின் நிலம், வான் மற்றும் கடல் எல்லைகளை மூட குவைத் அமைச்சரவை முடிவு செய்தது.
இதற்கிடையில், குவைத்தில் நுழைய தற்காலிக புகலிடங்களில்(துபாய்... etc) சிக்கித் தவிக்கும் பயணிகளை அழைத்து வருவதற்காக விமான நிலையத்தை ஒரு நாள் திறக்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் எடுத்த முடிவு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முடிவின் அடிப்படையில் இன்று பெய்ரூட்டிலிருந்து வரவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.