Dec-14,2020
குவைத்தில் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதால் ஷேக் ஜாபீர் ஸ்டேடியத்தில் பொதுப்பணி துறை அமைச்சகத்தால் குவைத்தில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய தனிமைப்படுத்தல் மையம் தனது சேவையை தற்காலிகமுடித்து கொண்டுள்ளது.
இந்த மையத்தில் 5,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில்,கோவிட் பாதிக்கப்பட்ட பலருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்லாவிதமான வசதி உடைய மருத்துவ மையம், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான தங்குமிடம், ஐ.சி.யூ மற்றும் தேவையான மருந்துகளை சேமிக்கும் மருந்தகம் உள்ளிட்டவை கொண்ட ஒரு மையமாக இது நிறுவப்பட்டன.
குவைத்தில் கொரோன பரவல் அதிகமாக அந்த நேரத்தில் கட்டுமானத்தை விரைவாக முடிக்க ரெட்ரஸ் கிரசென்ட் சொசைட்டியின் தன்னார்வலர்களின் சேவைகள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. குவைத்தில் புதியகோவிட் வழக்குகள் கடந்த இரண்டு மாதங்களில் கணிசமாகக் குறைந்துவிட்டன. இருந்தாலும் குவைத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக நிறுவப்பட்ட சில கள-மருத்துவமனைகள் முன்னெச்சரிக்கை அடிப்படையில் தொடர்ந்து தங்கள் சேவையை வழங்கி வருகிறது.
குவைத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு பல மாதங்களுக்கு பிறகு கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நேற்று 174 ஆக சுருங்கியது. மேலும் குளிர்காலம் என்பதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க சுகாதரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
.