சவுதி உள்துறை இன்று அதிகாலையில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டவர் அங்கிருந்து வெளியேறுவது மற்றும் நாட்டின் எல்லை மூடப்பட்டது தொடர்பான தெளிவாக விளக்கம் தற்போது தெரியவந்துள்ளது.
நேற்று மாலையில் சவுதி சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் சவுதியில் இருந்து வெளியேற அனுமதி வழங்கி வெளியிட்டுள்ள உத்தரவு இன்று முதல் நடைமுறையில் வருகிறது. ஆனால் சவுதி உள்துறை அமைச்சகம் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்ட எல்லைகள் திறப்பது நீட்டித்துள்ளது, இதன் காரணமாக தடை உத்தரவு மேலும் ஒரு வாரத்திற்கு நடைமுறையில் இருக்கும்.
இதன் மூலம் வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டிற்கு விமானங்கள் மூலம் வெளியேற மட்டுமே முடியும், ஆனால் கடல்,வான்வழி மற்றும் நிலவழி சவுதிக்குள் இன்னும் ஒரு வாரத்திற்கு வெளியிலிருந்து யாருமே நுழைய முடியாது என்பது தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் சவுதியில் நுழைய காத்திருக்கும் வெளிநாட்டவர்கள் இன்னும் ஒருவாரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடைய ரியாத், தமாம், ஜித்தா மற்றும் மக்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஜோர்டான் உள்ளிட்ட இடங்களில் மரபணு மாற்றம் ஏற்பட்ட புதிய கொரோனா சிலரிடம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.