Dec-11,2020
ஓமன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்போது தாயகத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து ஓமான் விசாவை புதுப்பிக்க முடியும். அதிகாரி கர்னல் அலி-அல்-சுலைமானி நேற்று வியாழக்கிழமை நட்ட செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ராயல் ஓமான் காவல்துறை தங்கள் நாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பல வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய அறிவிப்பு மூலம் வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வெளியே இருந்தாலும் தங்கள் விசாக்களை புதுப்பிக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது. 180 நாட்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களும் தங்கள் விசாக்களையும் புதுப்பிக்க முடியும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் அனைத்து வகையான விசாக்களும் தற்போது ஓமன் அரசு வழங்குகிறது.10 நாட்களுக்கான சுற்றுலா விசாக்கள் மற்றும் இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் புதிய வேலை விசாக்கள் மீண்டும் வழங்க துவங்கியுள்ளது என்றார்.