BREAKING NEWS
latest

Thursday, December 3, 2020

குவைத்தில் தமிழக பெண்மணி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்:

குவைத்தில் தமிழக பெண்மணி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்:

           

Dec-3,2020

குவைத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த இந்திய தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவர் பெயர் சபீனா(வயது-59) எனவும் சென்னை, முகப்பேர், மேற்கு தெருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

குவைத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணி பெண்ணாக,வேலை செய்து வந்தவர் சபீனா வயிற்றில் ஏற்பட்ட கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி (01-12-2020) அன்று உயிரிழந்தார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மகனும்  குவைத்தில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தினர் வேண்டுகோள் அடிப்படையில் சபீனா அவர்கள் உடல் குவைத்தில் அடக்கம் செய்வதா அல்லது தாயகம் அனுப்புவதா என்று பின்னர் அறிவிக்கப்படும் எனவும், இதற்காக பணிகளை மக்கள் சேவை மைய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்க்ஷஎன்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comments to குவைத்தில் தமிழக பெண்மணி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்:

« PREV
NEXT »