குவைத்தில் சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது:
Dec-3,2020
எலும்பு மஜ்ஜை மாற்றுதல் அல்லது ஸ்டெம் செல் மாற்று என்பது சேதமடைந்த அல்லது நோயுற்ற எலும்பு மஜ்ஜையை ஆரோக்கியமான இரத்தத்தை உருவாக்கும் ஸ்டெம் செல்கள் மூலம் மாற்றுவதற்கான ஒரு செயல்முறையாகும். உங்கள் எலும்பு மஜ்ஜை சரியாக வேலை செய்வதை நிறுத்தி,போதுமான ஆரோக்கியமான இரத்த அணுக்களை உருவாக்காதபோது இது தேவைப்படுகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை உங்கள் சொந்த உடலில் இருந்து செல்களை எடுத்து அல்லது ஒரு நன்கொடையாளரிடமிருந்து பெற்று செய்யலாம்.
குவைத்தில் உயிரணு இரத்த சோகையால் அவதிப்பட்டு வந்த நோயுற்ற தனது சகோதரிக்கு11-வயது சிறுமி இதை நன்கொடையாக அளித்தார். அறுவை சிகிச்சைக்கு 3 மணி நேரம் நடைபெற்றது நன்கொடையாளர் மற்றும் நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவிக்கப்பட்டுள்ளனர். இது நாட்டில் நடந்த இரண்டாவது வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை ஆகும், இது ஒரு வரலாற்று சாதனை என்று இதற்கு தலைமை தாங்கிய மருத்துவர் Sundus Al-Sharida அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை ஆனது கடந்த வாரம் நாட்டில் நடந்த முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்து நிலையில், சில நாட்களுக்குப் பிறகு நடந்துள்ளது. குவைத்தின் சுகாதார அமைச்சர் ஷேக் டாக்டர் பசில் அல்-சபா இந்த அறுவைச் சிகிச்சை ஈடுபட்ட அனைத்து துறை மருத்து ஊழியர்களையும் வாழ்த்தியுள்ளார்.