குவைத்தில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் போக்குவரத்து துறையில் குடிமக்கள் வேலை செய்வதற்கு அனுமதி:
குவைத்தில் ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கவும் மற்றும் பொது போக்குவரத்து துறை உள்ளிட்ட அரசு சார்ந்த சேவைகளில் ஓட்டுநர்கள் போன்ற பதவிகளில் பணியாற்ற குவைத்திகளை அனுமதிக்கும் உத்தரவை உள்துறை அமைச்சர் அனஸ்-அல்-சலே வெளியிட்டுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து சட்டங்களில் திருத்தம் செய்யபட்டு இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. இதன்மூலம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த இரண்டு துறைகளிலும் குவைத்திகள் பணியாற்றலாம்.
கூடுதலாக,நெருங்கிய உறவினர்கள் மற்றும் மற்றவர்களுக்கும் ஓட்டுநர் பயிற்சி அளிக்க குவைத்திகளுக்கு தற்காலிக பயிற்சி உரிமங்கள் வழங்கப்படும். இந்த துறையில் குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் நோக்குடன் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு இதற்காக முதல் படியாக கருதப்படுகிறது.
இந்த இரண்டு துறைகளிலும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வேலை செய்து வருகின்றனர்.