குவைத் வானிலை ஆய்வு மையத்தின் தினசரி அறிவிப்பு:
Dec-4,2020
குவைத் வானிலை ஆய்வு மையம் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் பகல் நேரங்களில் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் மற்றும் காற்று வடகிழக்கு திசையில் இருந்து ஏற்ற இறக்கமாக, மிதமான வேகத்துடன் மணிக்கு 08 - 40 கிமீ / வேகத்தில் இருக்கும். மேலும் சிதறிய அளவிலான மழைக்கு வாய்ப்பு, இது சில நேரங்களில் இடியுடன் கூடிய மழையாக மாறும்,சில பகுதிகளில் மூடுபனி உருவாக்கவும் வாய்ப்புள்ளது.
இரவைப் பொறுத்தவரை, வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். காற்று வடகிழக்கு திசையில் ஏற்ற இறக்கமாக மணிக்கு 08 - 40 கிமீ /வேகத்தில் இருக்கும், சில நேரங்களில் சிதறிய மழைக்கான வாய்ப்புடன், இது இடியுடன் கூடிய மழையாகவும் மாறலாம். சில பகுதிகளில் மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
நாட்டின் பிராந்தியங்களுக்கு ஏற்ப 23 டிகிரி முதல் 19 டிகிரி வரை மாறுபடும் வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.