இந்தியாவின் இராணுவ தலைமை அதிகாரி இன்று சவுதி வருகிறார்:
Dec-07,2020
இந்திய ராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே ஞாயிற்றுக்கிழமை(இன்று) சவுதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் பயணமாக இன்று சவுதி செல்கிறார்.
தகவல்களின்படி, ஜெனரல் நரவனே முதலில் இரண்டு நாட்கள் பயணமாக சவுதி சென்று பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்வார். முக்கியமாக, இரண்டு ஆசிய அரபு நாடுகளுக்கு ஒரு இந்திய இராணுவத் தலைவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
சவுதி பயணத்தின்போது, இந்திய ராணுவ தலைவர் சவுதி தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் உரையாற்றுவார். ஜெனரல் நரவனே கூடுதலாக இரு நாடுகளின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இரண்டு நாட்கள் சவுதி பயணத்தைத் முடித்துவிட்டு அங்கிருந்து அமீரகம் புறப்பட்டு செல்கிறார்.