Dec-10,2020
குவைத் அரசால் நேரடியாக நுழைய தடை செய்யப்பட்ட அதிக கொரோனா ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வீட்டுத் தொழிலாளர்களைத் திருப்பி அழைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக முதல் விமானம் அடுத்த திங்கட்கிழமை வீட்டுத் தொழிலாளர்களுடன் இந்தியாவில் இருந்து குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேரும் என்று சிவில் ஏவியேஷன் இன்று அதிகாலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<<arabtamildaily>>
இதுபோல் குவைத் வெளியுறவு அமைச்சகம், சுகாதார அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வெளிநாடுகளில் அங்கீகாரம் பெற்ற மருத்துவ ஆய்வகங்கள் சான்றிதழ் பெற்ற பின்னரே பிலிப்பைன்ஸிலிருந்து தொழிலாளர்கள் வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று(புதன்கிழமை) குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து நேரடியாக தொழிலாளர்கள்<<arabtamildaily>>வரும் நிலையில் அதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.