BREAKING NEWS
latest

Sunday, December 6, 2020

வெளிநாட்டினருக்கு எதிராக எப்போது அறிக்கை வெளியிடும் சஃபா-அல்-ஹாஷிமி தேர்தலில் தோல்வி:

வெளிநாட்டினருக்கு எதிராக எப்போது அறிக்கை வெளியிடும் சஃபா-அல்-ஹாஷிமி தேர்தலில் தோல்வி:


Dec-06,2020

குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய அறிக்கைகளை எப்போதும் வெளியிட்டு நாட்டில் உள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்த சஃபா-அல்-ஹாஷிமி எம்.பி தேர்தலில் படுதோல்வியடைந்தார். குவைத் நேற்று நடைபெற்ற 18-வது பாரளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பெயர் விபரங்களை ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் தேர்தல் தலைமை அதிகாரி இன்று(06/12/20) ஞாயிற்றுக்கிழமை காலையில் வெளியிட்டார்.

குவைத்தின் மூன்றாவது தொகுதியில் இருந்து நான்காவது முறையாக அவர் எம்.பி பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் இந்த முறை நடந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களை விட அவர்கள் மிகவும் பின் தங்கியுள்ளார்.  2012 முதல் தொடர்ச்சியாக மூன்று முறை அதே தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற சஃபா, முதல் முறையாக தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். அவர்களுக்கு 2012 ல் 2622 வாக்குகளும், 2013 ல் 2036 வாக்குகளும், 2016 ல் 3273 வாக்குகளும்  பெற்று வெற்றிபெற்றார். ஆனால் இம்முறை 1000 வாக்குகள் கூட பெற முடியவில்லை. கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் வெற்றிபெற்ற ஒரே பெண் உறுப்பினர் இவர் ஆவார்.

வெளிநாட்டினரின் சுவாச காற்று மற்றும் பயன்படுத்தும் பாதைகளுக்கு வரையில் வரி விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு  சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு சர்வதேச அளவில் பிரபலமானவர். மேலும் நாட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு வெளிநாட்டினர் தான் காரணம் எனவும்,வெளிநாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் நாடாளுமன்றத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தார். நாட்டில் உள்ள வெளிநாட்டு மக்கள் தொகையை குறைக்கவும், வெளிநாட்டினர் தாயகம் அனுப்பும் பணத்திற்கு சிறப்பு வரி விதிக்கவும் அழைப்பு விடுத்து அவர்கள் பாராளுமன்றத்தில் பலமுறை தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளார்.

கடைசியாக சமீபத்தில், கொரோனா காலத்தில் வெளிநாட்டவர்களுக்கு இலவச மருத்துவ வசதி வழங்குவதற்கு எதிராகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து தனக்கு தொடர்பாக கொலை மிரட்டல் வருகிறது என்றும் ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 56-வயதாகும் சஃபா அல் ஹாஷிமின் இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் உள்ள  குடும்பத்தினர் இந்தியாவின் கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் என்பதும் ஆச்சரியமான விஷயம் ஆகும். அதாவது இவருடைய பாட்டியின் முந்தைய தலைமுறை(கொள்ளுப்பாட்டி) இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ரிப்போர்ட்டர் டிவிக்கு அளித்த பேட்டியில், தான் பல முறை கேரளாவுக்கு வந்துள்ளதாகவும் கேரளாவையும், இந்தியாவையும் நேசிப்பதாகவும் கூறினார்.கடந்த காலங்களைப் போலல்லாமல், முந்தைய காலங்களில் வெளிநாட்டினர் தொடர்பான மனித உரிமைகள் பிரச்சினைகளில் எப்போதும், வெளிநாட்டு சமூகத்துக்கு பக்கபலமாக இருந்த அவர்கள், வெளிநாட்டு சமூகத்திற்கு எதிராக அறிக்கைகளை கடந்த தேர்தல் வெற்றிக்குப் பிறகு வெளியிடத் தொடங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு சமூகத்திற்கு எதிரான சஃபா அல்-ஹாஷிமின் இந்த கடுமையான  நிலைப்பாடுகள் காரணமாக பல பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும், குவைத் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add your comments to வெளிநாட்டினருக்கு எதிராக எப்போது அறிக்கை வெளியிடும் சஃபா-அல்-ஹாஷிமி தேர்தலில் தோல்வி:

« PREV
NEXT »