Dec-12,2020
இந்தியாவில் இருந்து சவுதிக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள விண்ணப்பிக்க வேண்டிய தேதி நீட்டிப்பு தொடர்பான புதியதகவலை நேற்று மத்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜனவரி-10,2021 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடைய கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றியே இதற்கு அனுமதி வழங்கபடும் என்று சவுதியும் ஹஜ் கமிட்டியும் அறிவித்துள்ளது.
ஜனவரி10,2021 முன்னர் பெறப்பட்ட பாஸ்போர்ட் ஆகவும், ஜனவரி10,2022 வரையிலான காலாவதி உள்ளதுமான பாஸ்போர்ட் கைவசம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.