குவைத்தில் Pfizer-BioNTech Covid-19 தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதி கிடைத்தது என்று குவைத் சுகாதார அமைச்சகம் இன்று(13/12/20) ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
அதன் கூடுதல் விபரங்கள் பின்வருமாறு:
Pfizer-BioNTech Covid-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த குவைத் மருத்துவ பதிவுத் துறை,மேற்பார்வைத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று மருந்து மற்றும் உணவு மேற்பார்வை துறையின் உதவி துணை செயலாளர் டாக்டர்.அப்துல்லா அல் பத்ர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
Pfizer-BioNTech Covid-19 தடுப்பூசியை மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அதை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யவும் நியமிக்கப்பட்ட குழுவால் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது என்றும், குழுவினர் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த விரிவான மதிப்பீடு செய்ததைத் தொடர்ந்து, அவர்கள் வழங்கிய மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை அல்-பத்ர் மதிப்பாய்வு செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் Pfizer-BioNTech Covid-19 தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த யு.எஸ். உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நேற்று ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.