சவுதிக்கு விமான சேவை மீண்டும் தொடங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்:
சவுதிக்கு தொழிலாளர்கள் பயணிக்க விதித்துள்ள தடை நீக்குவது தொடர்பான அறிவிப்பு இன்று(டிசம்பர்-2) புதன்கிழமை வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அது தொடர்பாக அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தேதி குறிப்பிடாமல் இன்று அதிகாலை 2 மணியளவில் அதிகாரபூர்வ தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
சவுதி கடந்த செப்டம்பர் முதல் கொரோனா பிரச்சினை ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில் தனது நாட்டிற்கான விமான பயணத்தடையை ஓரளவு நீக்கியது. இருந்தாலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் செல்வதற்கு தொடர்ந்து தடை நீடித்தது வருகிறது. முன்னர் வருகிற 2021ஜனவரி மாதத்தில் முழு சேவையையும் மீண்டும் தொடங்கும் என்று சவுதி அறிவித்திருந்த நிலையில், அதற்கான அதிகாரபூர்வ தேதி டிசம்பர் வெளியாகும் என்று கூறியிருந்தது. இதன் அடிப்படையில் உள்ளூர் ஊடகங்கள், விமானத்தின் சேவைகள் மீண்டும் தொடங்குவது தொடர்பாக நாளை(அதாவது இன்று) உள்துறை அமைச்சகம் அறிவிக்கும் என்று செய்திகளை வெளியிட்டது.
இந்தியர்கள் மீண்டும் சவுதி திரும்புவது தொடர்பாக சவுதி அதிகாரிகளுடன் விமான சேவை சம்பந்தமாக பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை இந்திய தூதரக அதிகாரிகள் நடத்தி வருகின்ற நிலையில், இன்று அதிகாலையில் விமான சேவை தொடங்குவது தொடர்பான தேதி அறிவிக்கப்படும் என்று சம்பந்தபட்ட துறை அறிவித்துள்ளது, பலருக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கடந்த நவம்பர் 26 முதல் இந்தியாவில் இருந்து சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு சவுதி திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது மும்பையில் அவர்களுக்கு மட்டும் ஸ்டாம்பிங் செய்ய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு, கொரோனா பரவல் காரணமாக சவுதி நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் மற்றும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையே கடந்த இரண்டு மாதங்களாக Air bubbles ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியர்கள் தாயகம் திருப்புவதற்காக வாய்ப்புகள் மட்டுமே திறந்து தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது.