Dec-12,2020
குவைத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு நேரத்தில் ஏர் லிப்ட்டிங் மூலம் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் குழந்தை நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்தியா கேரளா மாநிலம் பாலக்காடு, வடக்கஞ்சேரியின் பகுதியை சேர்ந்த குழந்தை சாதிகா(வயது-6) இவருடைய தந்தை பெயர் ரதீஷ்குமார்.
குவைத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தநிலையில் மகளுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவை தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் புற்றுநோய் கண்டறிப்பட்டது. தொடர்ந்து குவைத்தில் உள்ள புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் காது புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமியின், நிலைமை மோசமடைந்த மேலதிக சிகிச்சைக்கு வசதிகள் குவைத்தில் இல்லாததால் விரைவில் வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சமூக சேவையாளர்களின் உதவியை நாடினர். தொடர்ந்து அவர்கள் வெளிவிவகார அமைச்சரையும் இந்திய தூதரையும் தொடர்பு கொண்டு இது தொடர்பான பேசினார்கள். மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரனுடனான பேச்சுவார்த்தை அடிப்படையில் குழந்தையின் மேல்சிகிச்சைக்கு வழி பிறந்தது. தொடர்ந்து கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உதவுவதற்காக குவைத்திற்கு வந்த இந்திய மருத்துவகுழு வந்த விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் சிறுமி ஏப்ரல் 25-ஆம் தேதி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விமானத்தில் சாதிகா மற்றும் அவரது தந்தை ரதீஷ் குமார் ஆகியோர் புறப்பட்டு சென்றனர்.
குவைத்தில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவக் குழுவின் விமானத்தில் சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தையும் செய்தனர். கொரோனா நெருக்கடி காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் விமானங்களின் சேவை அப்போது நிறுத்தப்பட்டது இருந்தது. இதற்கிடையில், வளைகுடாவிலிருந்து இந்தியாக்கு நடத்தப்பட்ட முதல் மீட்பு நடவடிக்கையாக இந்த நிகழ்வு
பாராட்டப்பட்டது.
தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சாதிகாவுக்கு சிறப்பு சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சிறுமி திருவனந்தபுரம் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில நேற்றிரவு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தாள்.