Dec-19,2020
நாம் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்-அப் செயலியில் பயன்படுத்தப்படும் சில வசதிகள் கணினி இல்லை குறிப்பாக வீடியோ&ஆடியோ அழைப்புகளை செய்ய முடியாது. இதையடுத்து கணினியிலும் விரைவில் இந்த வசதி அறிமுகம் செய்ய உள்ளதாக குழுமத்தின் செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கையில தெரிவித்துள்ளார்.
தற்போது கணினியில் 'பீட்டா' (Beta) வாட்ஸ்-அப் பயனர்களுக்கு சோதனை முயற்சியாக இவ்வசதி கிடைக்கிறது. கணினி மூலம் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் செய்யப்பட்டாலும் டெஸ்க்டாக் செயலியில் இணைப்புக்காக ஸ்மார்ட்போன் அவசியம். ஸ்மார்ட்போன் இல்லாமல் கணினியில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
நண்பர்கள், குடும்பத்தினருடன் வீடியோ பகிர்ந்துகொள்வதற்கு முன்பு அல்லது Status வைப்பதற்கு முன்பு அதை ஒலியில்லா வடிவுக்கு மாற்றுவதற்கான வசதியை வழங்கவும் வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது. அட்வான்ஸ்ட் வால்பேப்பர் வசதியை வாட்ஸ்-அப் அறிமுகம் செய்து வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு அரட்டைக்கும் வெவ்வேறு வால்பேப்பர்களை பயன்படுத்த முடியும்