BREAKING NEWS
latest

Saturday, December 5, 2020

குவைத் வானிலை ஆய்வு மையத்தின் தினசரி அறிக்கை:

குவைத் வானிலை ஆய்வு மையத்தின் தினசரி அறிக்கை:

Dec-5,2020

குவைத் வானிலை ஆய்வு இன்று சனிக்கிழமை(05/12/20) வெளியிட்டுள்ள அறிக்கையில் பகல் நேரத்தில் வானிலை ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றும், வடகிழக்கு பகுதியில் இருந்து மிதமான வேகத்தில் மணிக்கு 08 முதல் 40 கிமீ / காற்று வீசும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது எனவும்,சில நேரத்தில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய மழை வரையில் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இரவைப் பொறுத்தவரை, ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், காற்று வடகிழக்கு திசையில் இருந்து மிதமான மணிக்கு 08 - 40 கிமீ வேகத்தில் வீசுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், சில நேரங்களில் கடுமையான  மூடுபனி உருவாக்க வாய்ப்புள்ளது. 

நாட்டின் பிராந்தியங்களுக்கு(இடங்களுக்கு) ஏற்ப எதிர்பார்க்கப்படும் அதிகபட்சமாக வெப்பநிலை 22 டிகிரி முதல் குறைந்தபட்சமாக 18 டிகிரி வரை மாறுபடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Add your comments to குவைத் வானிலை ஆய்வு மையத்தின் தினசரி அறிக்கை:

« PREV
NEXT »