Dec-12,2020
துபாயில் பிரபலமான சமூக ஆர்வலர், அஷ்ரப் தாமரசேரி ஆயிரக்கணக்கான இறந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழாலாளர்கள் உடல்களை அவர்கள் நாடுகளுக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில் நேற்று வெள்ளிக்கிழமை 4 இந்தியர்கள் உடல்களை தாயகம் அனுப்பினேன். அதில் திருவனந்தபுரம் கடக்காவூரைச் சேர்ந்த பினு-பாபு(வயது-33) என்ற இளைஞரும் ஒருவர்.
அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஷார்ஜாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு வருடங்கள் கடந்துள்ளது. கடந்த மாதம் அவரது மனைவி அதிராவை தாயகத்திற்கு அனுப்பியபோது ஐந்து மாத கர்ப்பமாக இருந்தார். பிரசவத்தின்போது தான் நாட்டில் இருப்பேன் என்ற வார்த்தையை பினுவால் காப்பாற்ற முடியவில்லை, அதற்குமுன் பினுவை மரணம் மற்றொரு உலகுக்கு அழைத்துச் சென்றது. பினு தனது சொந்த குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் வேறு உலகத்திற்குத் திரும்பினார்.
கடந்த வாரம் பினு, வேலை முடித்து வீட்டிற்கு செல்லும் வழியில் தனது நண்பரின் பெட்டிகளை மூட்டை கட்டி, வண்டியில் வைத்து,நண்பரை தாயகம் அனுப்பிவைத்த பிறகு தன்னுடைய அறையை நோக்கி நடந்துக்கொண்டு இருந்த நிலையில், திடிரென மயங்கி கீழே விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிழந்தார். பரிசோதனையில் மாரடைப்பால் அவர் இறந்தார் என்பது தெரியவந்தது.
மேலும் அவரது வரிகளில் நாம் ஒரு இடத்தில் இருந்து வாழ்வாதாரம் தேடி புலம்பெயர்ந்து செல்வது தான் வெளிநாட்டு வாழ்க்கை, இடையில் தன்னுடைய வீட்டிற்கே...... விருந்தினர் போல் வந்து செல்கிறோம். சிலர் கனவுகளை இடையில் விட்டுவிட்டு, பாஸ்போர்ட்டில் உள்ள விசாவை ரத்து செய்து, கடைசியாக பெட்டியில் படுத்து, உறவினர்களும் நண்பர்களும் கண்ணீருடன் பிரியாவிடை தருகிறார்கள். ஒவ்வொரு வெளிநாட்டினருக்கும் ஒரு கதை, சிலருக்கு இழப்புகளின் கதையும் மற்ற சிலருக்கு வெற்றியின் கதையும், ஆனால் இறுதியில் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஒவ்வொரு வெளிநாட்டினர் வாழ்க்கையும் கூறமுடியாத வலிகளுடன் கடந்து செல்கிறது..பல எதிர்பார்ப்புடன்......
-அஷ்ரப் தாமரசேரி