குவைத் திரும்புவதற்கு சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் முன்பதிவு தளத்தை அறிமுகம் செய்துள்ளது:
(Photo Official source DGCA)
Dec-08,2020குவைத்திற்கு கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக தடைசெய்யப்பட்ட 34 நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் நேரடியாக நுழைவதற்கு கடந்த பல மாதங்களாக தடை விதித்துள்ள நிலையில், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்கள்(Article-20) நேரடியாக நுழைய டிசம்பர்-7 முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான முடிவு கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இதன் தொடர்ச்சியாக அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வீட்டுத் தொழிலாளர்கள் நேரடியாக குவைத்தில் நுழைவதற்கு முன்பதிவு செய்யும் Al-Sarabeh தளத்தை குவைத் சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் நேற்று இரவு அறிமுகம் செய்துள்ளது.
இணையதள Link: http://belsalamah.com
(Note:உங்களை அழைத்துவர Sponsor இந்த தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்)
தாயகத்தில் உள்ள வீட்டுப் பணியாளர்கள் உங்கள் அருகிலுள்ள வெளிநாட்டுக்கு செல்ல பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் அனுமதி உள்ள மையங்களில் பரிசோதனை செய்யலாம். குவைத் வந்த பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ள சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல் அடிப்படையில் நீங்கள் பின்பற்ற வேண்டியது இருக்கும். குவைத்திற்கு தற்போது 20-பிரிவின்(Article-20)கீழ் செல்லுபடியாகும்(Validity Visa) விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே வரமுடியும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் புரிதலுக்காக:
உங்கள் பயணச்சீட்டு மற்றும் குவைத்திற்கு வந்த பிறகு உள்ள தனிமைப்படுத்தல், உணவு, பி.சி.ஆர் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து செலவுகள் தொடர்பாகவும், கூடுதல் சந்தேகங்களை பற்றியும் உங்கள் முதலாளியிடம்(Sponsor) தொடர்பு கொண்டு தெளிவாக விளக்கம் பெற்ற பிறகு மட்டுமே புறப்படுங்கள்.
மேலும் Article-18 உள்ளிட்ட மற்ற பிரிவு விசாவில் உள்ள இந்தியர்கள் உட்பட அனைத்து நாடுகளைச் சேர்ந்த நபர்களும் துபாய் உள்ளிட்ட எதாவது ஒரு நாட்டில் 14 நாட்கள் தங்கியிருந்து பி.சி.ஆர் சான்றிதழ் பெற்ற பிறகு மட்டுமே குவைத்தில் நுழைய முடியும். இந்த நடைமுறையே இன்று(08/12/20) செவ்வாய்க்கிழமை வரையில் பின்பற்றப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இதில் எதாவது மாற்ற வருமா.....???? என்பது தெரியவில்லை......