குவைத் தூதர், இந்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் சந்திப்பு:
Dec-2,2020
இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில் வைத்து இன்று(02/12/20) புதன்கிழமை இந்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் இந்தியாவுக்கான குவைத் தூதர் ஜாசிம்-அல்-நஜிம் இருவருக்கும் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.
மேலும் இந்த சந்திப்பின்போது நாட்டின் ஜவுளித் துறையில் குவைத், முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று. தொடர்ந்து இருவரும் இரண்டு நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்ததாகவும், பல்வேறு துறைகளில், குறிப்பாக இந்தியாவில் குவைத் முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது என்றும் குவைத் அதிகாரபூர்வ அரசு செய்திதாள் செய்தி வெளியாகியுள்ளது
மேலும் இரு நாடுகளின் முன்னேற்றம் மற்றும் உறவு அபிவிருத்தி தொடர்பாக இரு நாடுகளின் தலைவர்கள் இதுவரையில் மேற்கொண்ட முயற்சிகள் மூலம் இந்திய-குவைத் உறவுகள் அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது என்றும் தூதர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் கடந்த இரண்டு சகாப்தங்களாக இந்தியாவின் பாலியஸ்டர் மற்றும் ஜவுளித் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை நியாயமான சர்வதேச விலையில் இந்தியாவிற்கு வழங்குவதில் குவைத் பெட்ரோல் கெமிக்கல் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதிலும் முதன்மை மூலப்பொருட்களை, குறிப்பாக glycol-ஐ வழங்குவதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஆதரிப்பதற்காக இரண்டு நாடுகள் நீண்ட காலத்திற்குரிய நட்புறவை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் அல்-நஜிம் கூறினார்.