குவைத்தின் புதிய பிரதமரை சற்றுமுன் மன்னர் நியமனம் செய்தார்:
Dec-08,2020
குவைத் புதிய பிரதமராக ஷேக் சபா அல் காலித் அல்-சபாவை அவர்களை, குவைத் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாமீண்டும் நியமித்து சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பான செய்தியை குவைத் அரசு ஏஜென்சி அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர்-5 ஆம் தேதி குவைத்தில் 18-வது பாரளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், டிசம்பர்-6 முடிவுகள் வெளியானது. இதையடுத்து பிரதமர் மற்றும் பழைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை மன்னரிடம் வழங்கினார்கள்.
இதையடுத்து அடுத்த புதிய அமைச்சரவை மீண்டும் பதவியேற்கும் நிலையில் பிரதமரை நியமனம் செய்து மன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சரவை பொறுப்பற்ற பின்னர் தான் கொரோனா சூழ்நிலையில், வெளியாகும் புதிய உத்தரவுகள் அடிப்படையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள்(நல்லது/கெட்டது) குறித்து தெரியவரும்.