குவைத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுகாதார பராமரிப்புக்காக நிறுவப்பட்ட தமன் மருத்துவமனைகளின் சிகிச்சைகள் தொடர்பான வசதிகளை மேலும் விரிவாக்கம் செய்வதன் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் கீழ் 5 ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் 600 நோயாளிகளை தங்கவைத்து சிகிச்சையளிக்கும் திறன் கொண்ட மருத்துவமனையும் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்படும் என்று தமன் இயக்குநர்கள் குழுவின் தலைவர் முத்தக் தமன் அல் சானியா தெரிவித்தார்.
ஃபர்வானியா மற்றும் ஹவேலியில் உள்ள தமன் சுகாதார மையங்கள் வழியாக ஏற்கனவே 5,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார். வெளிநாட்டு தொழிலாளருக்கு ஒரு ஆண்டிற்கான சுகாதார காப்பிட்டு கட்டணம்(ஒரு நபருக்கு) 130 தினார்கள் ஆகும். மேலும் கூடுதலாக ஒவ்வொரு முறையும் வரும்போது நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும். சுகாதார அமைச்சகத்தால் வரையறுக்கப்பட்டதன் படி மட்டுமே கட்டணம் வசூலிப்பார்கள் என்றும் வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.