குவைத் தொழில் அதிபரும், சமூக சேவகருமான அப்துல் அஜீஸ் காலமானார்:
Dec-4,2020
குவைத்தின் பிரபல தொழிலதிபரும், சமூக சேவையில் முன்னோடியுமான அப்துல் அஜீஸ் ஹமூத் அல் ஷாயா காலமானார். அவருக்கு வயது-94,இன்று காலை குவைத்தில் அவர் மரணமடைந்தார்.
அவர் குவைத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபலமான Kuwait Red Crescent என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவனர்களில் ஒருவராகவும், இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை வேலைக்கு அமர்த்தும் அல் ஷயா குழுமத்தின்(நிறுவனத்தின்) நிறுவனர் ஆவார்.
அந்த காலத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வியை முடித்த அவர் மாமாவுடன் அங்கேயே தங்கியிருந்தார். இரண்டாம் உலகப் போரின்போது கடுமையாக பாதிக்கப்பட்ட குவைத் மக்களுக்கு உணவு மற்றும் மருந்தை கொண்டுவந்து வழங்குவதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்கை வழங்கினார்.
குவைத் நகரசபையில் பல முறை கவுன்சிலராக இருந்த அல்-ஷயா, 1964-ஆம் ஆண்டில் ஆன காலகட்டத்தில் நாட்டின் நீர்-மின் துறையின் அமைச்சராகவும் பணியாற்றினார். அவர் எப்போதும் இந்தியர்கள் இடையே நெருக்கமான உறவை பேணிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு குவைத் இந்திய தூதர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இந்தியாவுடன் அவருடைய உறவு குறித்து நினைவு கூர்ந்தார். அல் ஷயா குழுமத்தின்(நிறுவனத்தின்) நிறுவனங்களில் உலகெங்கிலும் 75000 ற்க்கும மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதில் பெரும்பாலான தொழிலாளர்கள் இந்தியர்கள் எனவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் இரங்கலை தூதர் பதிவு செய்துள்ளார்.