குவைத்திற்கு முதல் கட்டமாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் திருப்புவதற்கு அனுமதி:
Dec-1,2020
குவைத்திற்கு வருகிற டிசம்பர்-7 முதல் வீட்டுத் தொழிலாளர்கள் நேரடியாக நுழைய அனுமதி நேற்று வழங்கிய நிலையில் அது தொடர்பான கூடுதல் தகவல் சற்றுமுன் நடைபெற்ற பத்திரிகையாளர்களின் சந்திப்பில் சிவில் ஏவியேஷனின் பொது நிர்வாகத் துறை செய்தித் தொடர்பாளர் சாத்-அல்-ஒடாய்பி கூறுகையில், முதல்கட்டமாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்கள் திருப்புவதற்கு அனுமதி என்றும் மற்ற நாட்டவர்கள் இரண்டாம் கட்டமாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
வீட்டுத் தொழிலாளர்கள் திரும்புவதற்கான திட்டத்தை செயல்படுத்த தேவையான சட்ட அம்சங்களையும் விரிவான நடைமுறைகளையும் பூர்த்தி செய்யுமாறு அமைச்சரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது என்றும் அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் நேற்று ஹிஸ் ஹைனஸ் ஷேக் சபா அல்-கலீத் தலைமையில் நடைபெற்ற வாராந்திர கூட்டத்தின் போது, டிசம்பர் 7 ஆம் தேதி அதாவது அடுத்த திங்கட்கிழமை முதல் வீட்டுத் தொழிலாளர்கள் திரும்பும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்றும், அதன் அடிப்படையில் ஒரு நபருக்கு விமான கட்டணம் இல்லாமல், தனிமைப்படுத்தல், உணவு மற்றும் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் சேர்த்து 270 தினார்கள் மதிப்பில் கட்டணம் நிர்ணயம் செய்ததாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், இதற்காக குவைத்தின் தேசிய விமான நிறுவனங்களான குவைத் எயர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் விமானிகளின் சேவையைப் பயன்படுத்தி நாளொன்றுக்கு 600 வீட்டுத் தொழிலாளர்கள் என்ற விகிதத்தில் குவைத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். மேலும் இந்தியாவிலிருந்து பயணிகளுக்கான விமான கட்டணம் 110 தினார்கள் என்று நிர்ணயம் செய்யபட்டுள்ளது. தொழிலாளர்களை திரும்பி
கொண்டுவருவதற்காக பிரத்யேகமாக அறிமுகம் செய்யபட்ட ஆன்லைன் போர்ட்டலில் ஸ்பான்சர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும்,Validity Visa(செல்லுபடியாகும் விசா) உள்ளவர்களுக்கு குவைத் திரும்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.