BREAKING NEWS
latest

Friday, December 25, 2020

குவைத்தில் கைதான 6 சிறுவர்கள் புத்தாண்டில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

Dec-25,2020

குவைத்தின் உள்ளூர் அரபு செய்தித்தாள் ஒன்று  இன்று வெள்ளிக்கிழமை  மாலையில் வெளியிட்டுள்ள செய்தியின்படி பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய குழந்தைகள் புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர் என்று  அதிகாரிகளின் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவரில் முதல் குற்றவாளி தெரிவித்தான் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளி முன்னாள் குவைத் நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் என்றும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் விசாரணை மற்றும்  இதுவரையிலான கண்டறியப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை உள்துறை அமைச்சர் ஷேக் தாமர் அல்-அலி மற்றும் துணை செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இசா அல்-நஹாம் ஆகியோரின் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளில் சிறப்புப் படைகளை நிறுத்தவும், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.மேலும் இந்த சம்பவம் குறித்த கூடுதல் விசாரணை மற்றும் முன்னேற்றங்கள் குறித்து உடனுக்குடன் தெரிவிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.எஸ் உடன் தொடர்புடைய 6 குழந்தைகளை நேற்று குவைத் தேசிய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.  ரகசிய தகவல்களின் அடிப்படையில் அஹ்மதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய  அதிரடி சோதனையின் போது சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த வீட்டில் இருந்து துப்பாக்கிகள், பல கணினிகள் மற்றும் ஐ.எஸ்ஸுடன் தொடர்பு கொண்ட பல பதிவுகளையும் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் பலருக்கும் தீவிரவாத கருத்துக்களை பரப்பியது தெரியவந்துள்ளது. முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் ஒரு பிரபலமான ஆன்லைன் விளையாட்டு மூலம் ஐ.எஸ் முகவரை முதலில் சந்தித்ததாக அதிகாரிகளிடம்  தெரிவித்திருந்தார். ஒரு வாரம் கழித்து, அவர் சமூக ஊடகங்கள் வழியாக அவனை தொடர்பு கொண்டு தீவிரவாத கருத்துக்களை ஏற்கும்படி கேட்டார். அவனின்
வீட்டின் அறையில் கொடியை வரையவும், மேலும் நண்பர்களை குழுவில் சேர்க்கவும், நிதி உதவி வழங்கப்படும் என்று அந்த நபர் கூறியதாகவும், தொடர்ந்து தனது நெருங்கிய நண்பருடன் பேசியதாகவும், மேலும் நான்கு பேரை குழுவில் சேர்த்ததாகவும் தெரிவித்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Add your comments to குவைத்தில் கைதான 6 சிறுவர்கள் புத்தாண்டில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

« PREV
NEXT »