இந்தியாவில் இருந்து வீட்டுத் தொழிலாளர்களுடன் இன்று நேரடியாக குவைத்துக்கு வரவிருந்த குவைத் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணம் இரு நாடுகளுக்கும் இடையிலான Air-Bubble ஒப்பந்தத்தின் விதிமுறைகள் இதுவரை திருத்தப்படவில்லை. கொரோன பரவல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான Air-Bubble ஒப்பந்தம் வரையறுக்கப்பட்து
ஒப்பந்தத்தின்படி, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கபடும் விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் மட்டுமே தற்போது குவைத்திலிருந்து இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. அதுபோல் மேலும் இந்தியாவில் இருந்து குவைத்திற்கு சிறப்பு அனுமதியுடன் மட்டுமே பயணிகளை அழைத்து வர முடியும். ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள் திருத்தாததால் இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை நேரடி விமான சேவைக்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து வீட்டுப் பணியாளர்களுக்காக இன்று இந்தியாவில் இருந்து புறப்படவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக, குவைத் தேசிய விமான நிறுவனங்களின் விமானங்கள் மட்டுமே வீட்டுப் பணியாளர்களை அழைத்து வர அனுமதிக்கப்படுகின்றன. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், வீட்டுத் தொழிலாளர்கள் நேரடியாக குவைத்தில் நுழைய அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதில் முதல்கட்டமாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
குவைத்தில் கொரோன பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நேரடி தொழிலாளர்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்குவதை குவைத் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இருப்பினும், தற்போதைய Air-Bubble ஒப்பந்தத்தின் விதிமுறைகளை திருத்தப்படாவிட்டால், இந்தியர்கள் குவைத் நேரடியாக நுழைய தொடர்ந்து தடை நிலுவையில் இருக்கும் என்று இந்த துறையில் அனுபவம் உள்ளவர்கள் கூறுகின்றனர்.