ஓமானில்10 மாதங்களாக மூடப்பட்டிருந்த உள்ள தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, நாட்டில் கோவிட் கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலயங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. கடுமையான கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடித்து இந்த ஆலயங்கள் அனுமதிக்கப்பட்டன. கோயில்களில் வழிபாடுகள் செய்ய இன்று(சனிக்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் விதிமுறைகளுக்கு இணங்க தர்சாய்தில் உள்ள கிருஷ்ணா கோயிலும், மஸ்கட்டில் உள்ள சிவன் கோயிலும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கோயில்களுக்குள் தினசரி நுழையக்கூடிய பக்தர்கள் எண்ணிக்கையில் கட்டுபாடு உண்டு. முகமூடி அணிவது, சமூக இடைவெளி கடைபிடித்தல் உட்பட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தினத்தன்று(நேற்று) பிரார்த்தனை செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ருவியில் உள்ள தேவாலயத்தில் விசுவாசிகளை ஆன்லைன் பதிவு முலம் அனுமதிக்கப்பட்டனர்.