குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்கான நிபந்தனைகளை குவைத் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்(DGCA) சற்றுமுன் அறிவித்துள்ளது.இதன் விவரங்களை அதிகாரிகள் ட்விட்டரில் வழியாக வெளியிட்டுள்ளது:
1)குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள் "குவைத்-டிராவலர்" தளத்தில் http://kuwaitmosafer.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
2) இரண்டாவது நிபந்தனை என்னவென்றால், கோவிட் நிலைமை இருப்பதால் குடிமக்கள்(Kuwaity) பயணத்தின்போது சுகாதார காப்பீடு வைத்திருக்க வேண்டும்.
3) குடிமக்கள் "குவைத்-டிராவலர்" தளத்தில் உள்ள உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.
4)மேலும் செல்லும் நாடுகளில் உங்களுக்கு பி.சி.ஆர் Nagative சான்றிதழ் தேவைப்பட்டால், அதை உங்களுடன் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும் நாட்டிற்கு வருபவர்களுக்கு நிபந்தனை பின்வருமாறு:
1) Shlonak Applicationயில் பதிவு செய்ய வேண்டும்
2) 96 மணிநேரத்திற்கு உள்ளே எடுத்த நோய்தொற்று Nagative பி.சி.ஆர் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்
3) நாட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு கட்டாயமாகும்.