Dec-18,2020
குவைத்தில் இடையிடையே சில கும்பல் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட செய்தி வெளியாவது வழக்கம். இந்நிலையில் தற்போது மீண்டும் 10 தினார் கள்ளநோட்டுகளை சிலர் புழக்கத்தில் விட்டுள்ளனர். இவர்களுக்கான தேடலை குவைத் குற்றபிரிவு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களான மளிகைக் கடைகளிலும், ஷாப்பிங் மால்களிலும், ஷாப்பிங் செய்யும் போது தினார் நோட்டுகளை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குவைத்தில் கள்ள நோட்டுகளை கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் வங்கிகள் மற்றும் ATM-யின் வழியாக இத்தகைய நோட்டுகள் கிடைக்காது. மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில் அசலுடன் ஒப்பீடனா தரத்தில் கள்ளநோட்டுகள் இருந்ததால் தெரியாமல் தாங்கள் பெற்றதாக கூறுகிறார்கள். இது தொடர்பாக செய்தியை குவைத் தினசரி நாளிதழ் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.