BREAKING NEWS
latest

Tuesday, December 15, 2020

குவைத் வானிலை ஆய்வு மையத்தின் தினசரி அறிக்கை:

Dec-15,2020

குவைத் வானிலை மையம் இன்று செவ்வாய் வெளியிட்டுள்ள அறிக்கையில பகல் நேரத்தில் வானிலை மிதமானதாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் காற்று தென்கிழக்கு திசையில் இருந்து மிதமாக மணிக்கு 12 - 38 கிமீ வேகத்தில் இருக்கும், சில சிதறிய மேகங்கள் மாலையில் தோன்றும் வாய்ப்பும் உள்ளது.

இரவைப் பொறுத்தவரை,குளிர்ச்சியாகவும் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தென்கிழக்கு திசையில் இருந்து மிதமான காற்று மணிக்கு 12 - 42 கிமீ வரையில் இருக்கும்.

நாட்டில் பகலில் எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை 23 டிகிரி என்றும், இது இரவில் 10 டிகிரியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Add your comments to குவைத் வானிலை ஆய்வு மையத்தின் தினசரி அறிக்கை:

« PREV
NEXT »