BREAKING NEWS
latest

Tuesday, December 29, 2020

குவைத் விமான நிலையம் திறந்தாலும்; தடை விதிக்கப்பட்டுள்ள நாட்டினர் நேரடியாக நுழைய முடியாது

குவைத்தின் எல்லைகளை ஜனவரி 2 முதல் மீண்டும் திறக்கும் முடிவானது, முன்னர் நாட்டில் நேரடியாக நுழைவதற்கு தடை விதித்துள்ள நாடுகளுக்கு பொருந்தாது. இருப்பினும், இந்தியா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், நேரடியாக நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இவர்கள் நுழைவுத் தடை இல்லாத மற்றொரு நாட்டில் தங்களின் 14 நாள்  தனிமைப்படுத்தல் முடித்த பின்னர் பி.சி.ஆர் சான்றுடன் குவைத்தில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

இப்படி நாட்டிற்கு(குவைத்திற்கு) வருகின்ற அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை இங்கும் முடிக்க  வேண்டும். ஆனால் ஆரம்பத்தில் உள்ளது போலல்லாமல், நாட்டிற்குள் நுழையும் அனைத்து பயணிகளையும் உன்னிப்பாக கண்காணிக்க சுகாதார அமைச்சகம் சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகளாவிய மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  குவைத் தனது நிலம், வான் மற்றும் கடற்படை எல்லைகளை இந்த மாதம் 21ஆம் தேதி மூட முடிவு செய்தது

இதைத் தொடர்ந்து, துபாய், ஓமான், துருக்கி ஆகிய நாடுகளில் இந்தியர்கள் உட்பட பலர் சிக்கித் தவிக்கின்றனர். மேலும், குவைத்தில் இருந்து தாய்நாட்டிற்கு பயணித்த காத்திருந்த பலரும் சிக்கியுள்ளனர். விமான நிலையத்தை திறக்கும் அமைச்சரவை இந்த முடிவு அவர்களுக்கு பெரும் நிம்மதியாக இருக்கும்.  இருப்பினும், இந்தியர்கள் உட்பட பெரும்பாலான வெளிநாட்டவர்கள் நேரடி விமானங்களில் குவைத்தில் நுழைய  விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் செய்திகளுக்காக இன்னும் காத்திருக்கிறார்கள்.

தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் துறை மருத்துவ ஊழியர்கள் அனைவரும் மற்றும் வீட்டுத் தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது. இவர்கள் குவைத் விதித்துள்ள கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நாட்டில் நுழையலாம். மேலும் வீட்டுத் தொழிலாளர்களை நேரடியாக அழைத்துவரும் நடவடிக்கைகளை குவைத் வரும் நாட்களில் மீண்டும் துவங்கும் என்று தெரிகிறது. முதல்கட்டமாக பிலிப்பைன்ஸ் வீட்டுத் தொழிலாளர்களின் முதல் குழுவினர் நாட்டில் நேரடியாக நுழைந்தனர்,  இந்திய வீட்டுத் தொழிலாளர்கள் குவைத்தில் நுழைய இருந்த நிலையில் குவைத் தங்கள் எல்லைகளை தீடீரென முடியது.


Add your comments to குவைத் விமான நிலையம் திறந்தாலும்; தடை விதிக்கப்பட்டுள்ள நாட்டினர் நேரடியாக நுழைய முடியாது

« PREV
NEXT »