Dec-17,2020
குவைத்திற்கு நேரடியாக பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டவை உட்பட அனைத்து நாடுகளிலிருந்தும் நேரடி விமானங்கள் அடுத்த ஜனவரி மாதம் தொடங்கும் என்று சிவில் விமான துறையின் நம்பகமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி தினசரி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நேரடியாக நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ள வீட்டுத் தொழிலாளர்களின் வருகை, அவர்களின் தனிமைப்படுத்தல் முறை மற்றும் அதன் செயல்திறனை ஆகியவற்றை சுகாதார அதிகாரிகள் மதிப்பிட்ட பிறகு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
மேலும் நாட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதால் மட்டும் நேரடி விமான சேவை அனுமதிக்க முடியாது எனவும், நாட்டில் தயார்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட அமைப்புகள், ஹோட்டல்கள் மற்றும் இது தொடர்பான உள்ளூர் கொரோனா தடுப்பு அமைப்புகளின் செயல்பாடுகள் ஆகியவற்றுடன், சுகாதார அமைச்சகத்தின் உத்தரவுகளுக்கு இணங்க குவைத் சிவில் விமான போக்குவரத்து துறையின் ஏற்பாடுகள், செயல்திறன், செயல்பாடுகளையும் அதிகாரிகள் மதிப்பீடு செய்வார்கள்.
அதே நேரத்தில் நேரடி விமான சேவை அனுமதிக்க மேற்கொள்ளும் நடவடிக்கையை டிராவல் ஏஜென்சிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.மேலும் குவைத்தில் நுழையும் பயணிகளின் தனிமைப்படுத்தல் காலம்14 நாட்கள் என்பதை, 5 இருந்து 7 நாட்களாக குறைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.