Dec-21,2020
குவைத்தில் உள்ள வீட்டுத் தொழிலாளர்களும் பயன்படுத்தும் விதத்தில் மை மொபைல் ஐடி(MY MOBILE ID)செயலியின் புதிய புதுப்பிக்கப்பட்ட பதிப்பை தற்பொது வெளியிடுவதாக சிவில் தகவல் பொது ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் முசீத் அல் அசோசி அறிவித்துள்ளார்.
எனவே இனிமுதல் குவைத்தில் தேவையான இடங்களில் வீட்டுத் தொழிலாளர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க புதிய புதுப்பிக்கப்பட்ட பதிப்பைப் பயன்படுத்தலாம் என்று அவர் விளக்கினார். இந்த புதிய பயன்பாட்டின் மூலம் வழக்கமான சிவில் அடையாள அட்டைக்கு பதிலாக டிஜிட்டல் முறையிலான இதை பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.
குவைத்தில் நுழைந்து மற்றும் வெளியேற இந்த MY MOBILE ID செயலியை பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். குவைத்தில் தனிப்பட்ட முறையில் உங்கள் அடையாளத்தை நிரூபிக்க மற்றும் அரசு சார்ந்த பொது சேவைகள் பெறுவதற்கு அடையாளத்தை நிரூபிக்கவும் இதைப் பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார்.
குவைத்தில் தற்போது இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக அசோசி தெரிவித்துள்ளார்.