குவைத் மற்றும் இந்தியா இடையே விமானப் போக்குவரத்திற்க்கு, தற்காலிக ஒப்பந்தத்தை இந்திய சிவில் விமான அமைச்சகம் புதுப்பித்து அறிவித்துள்ளது. இதன் மூலம், குவைத் அதிகாரிகள் ஒப்புதல் அளித்த, பின்வரும் வகையைச் சேர்ந்தவர்கள் வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் ஊழியர்கள், தனியார் துறையை சேர்ந்த சுகாதார ஊழியர்கள் உட்பட நேரடியாக குவைத்துக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கொரோனா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Air-Bubble ஒப்பந்தம் இதற்காக திருத்தப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், சுகாதார அமைச்சகம் நிர்ணயிக்கப்பட்ட கோவிட் நெறிமுறைகள் கடைபிடித்த வீட்டுத் தொழாலாளர்கள் நேரடியாக குவைத் திரும்புவதற்காக அனுமதி வழங்கியது, பின்னர், கடந்த வாரம், சுகாதார அமைச்சகத்தின் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் அனுமதி வழங்கியது, தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை தனியார் துறையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் குவைத் திரும்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும், கோவிட்டின் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான உள்ள Air-Bubble ஒப்பந்தத்தில் அத்தகைய நபர்களை சேர்க்கவில்லை. இதையடுத்து, குவைத் டி.ஜி.சி.ஏ அதிகாரிகள் தாங்கள் வெளியிட்டுள்ள புதிய உத்தரவுகளை மேற்கோளிட்டு இந்திய சிவில் விமான அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று முன்தினம் 15-ஆம் தேதியிட்டு சாதகமாக புதியஏந்த தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரவின் படி, பயணிகள் கோவிட் சோதனை செய்து எதிர்மறையான அறிக்கையை கொண்டு செல்ல வேண்டும். இதேபோல், Validity இகாமா மற்றும் Validity நுழைவு விசா உள்ளவர்கள் வரலாம். இந்தியாவில் இருந்து குவைத் செல்லும் விமானம் பயணிகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு திறந்திருக்கும். விதிமுறைகளின்படி, இரு நாடுகளுக்கும் டிக்கெட்டுகளை விமான நிறுவனங்களுக்கு வழங்க முடியும் என்றும் உத்தரவு தெளிவுபடுத்துகிறது.
கொரோனாவின் சூழலில், இந்தியா உட்பட 34 நாடுகளில் இருந்து குவைத்துக்கு நேரடியாக நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் 14 நாட்கள் தங்கியிருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழ் பெற்று குவைத் திரும்பி, இங்கும் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கையை நேரிடவேண்டிய நிலை தற்போது உள்ளது. தற்காலிக பயணத்தடை கொண்ட நாடுகளில் இருந்து வெளிநாட்டினரை ஒவ்வொரு கட்டங்களாக திருப்பி அழைக்கும் குவைத்தின் அரசின் முயற்சியாகவே, தற்போது வழங்கப்பட்டுள்ள வீட்டுத் தொழிலாளர்களுக்கான அனுமதி என்று கருதவேண்டி உள்ளது.