கொரோனா காரணமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு குவைத்தில் நுழைந்த வீட்டுத் தொழிலாளர்களின் முதல் குழுவினர் டிசம்பர்-28,2020 இன்று(திங்கட்கிழமை) நிறுவன தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர். கொரோனா காரணமாக 34 நாடுகளில் இருந்து தொழாலாளர்கள் நேரடியாக குவைத்தில் நுழைய தடை இருந்த நிலையில், வீட்டுத் தொழிலாளர்கள் மட்டும் குவைத்தில் நுழைய அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இதன்படி குவைத்துக்குத் திரும்பிய வீட்டுத் தொழிலாளர்களின் முதல் குழுவினர் இன்று தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து மையத்தை விட்டு வெளியேறினர். வீட்டுத் தொழிலாளர்களின் முதல் குழுவினர் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி பிலிப்பைன்ஸிலிருந்து குவைத் வந்து சேர்ந்தனர்.
சுகாதாரத்துறை ஆதாரங்களின்படி தனிமைப்படுத்தல் முடிந்த பிறகு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர்கள் அனைவரின் பி.சி.ஆர் சோதனை எதிர்மறையாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய வீட்டுத் தொழிலாளர்களின் முதல் குழுவினர் குவைத்தில் நுழைய இருந்த நிலையில் குவைத் மீண்டும் தங்கள் எல்லைகளை மூடியது. இதையடுத்து இந்த பயணம் மீண்டும் தடைப்பட்டது.