Dec-15,2020
குவைத்தில் கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக நேரடியாக தொழிலாளர்கள் நுழைய கடந்த பல மாதங்களாக தடை நடைமுறையில் இருந்தது. தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வீட்டுத் தொழிலாளர்கள் முதல்கட்டமாக நேரடியாக நுழைய அனுமதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து முதன்முறையாக நேற்று(14/12/20) சென்னையில் இருந்து தொழாலாளர்களுடன் முதல் விமானம் குவைத் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு நாடுகளுக்கிடையிலான Air-Bubble ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யாத காரணத்தால் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு முதன்முறையாக இன்று(செவ்வாய்க்கிழமை) பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்கள் நேரடியாக குவைத் வந்தடைந்தனர். இவர்கள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து குவைத் ஏயர்வேஸ் விமானம் மூலம்அதிகாலையில் குவைத் வந்தனர்.
இந்த விமானத்தில் மொத்தமாக 61 பேர் வந்துள்ளனர். குவைத் விமான நிலையத்தில் சுகாதாரத்துறை நடவடிக்கைகள் முடித்து,14 நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு(Institutional Quarantine) மாற்றப்பட்டனர்.