BREAKING NEWS
latest

Monday, December 21, 2020

குவைத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது என்று சற்றுமுன் செய்தி:


Dec-21,2020

குவைத்தில் தென்மேற்கு பகுதியான Al-Manakish பகுதியில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி சரியான காலை 6:04 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதை அந்த பகுதியில் உள்ள மக்களால் உணர்ந்தனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.

4.4 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் Al-Manakish பகுதியில் நிலத்தில் அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்று,குவைத் தேசிய நில அதிர்வு ஆய்வு நிறுவனம் இன்று(21/12/20) திங்கள்க்கிழமை அதிகாரப்பூர்வ தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் யூரோ-மத்திய தரைக்கடல் நில அதிர்வு நிறுவனமும் இந்த அதிர்வு தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தொடர்பாக குவைத்தின் வானிலை மற்றும் புவியியலாளருமான அடெல்-அல்-சாடவுன் தனது சமூக வலைதளமான ட்விட்டரில் கணக்கில் நாட்டின் மேற்கே அமைந்துள்ள Al-Manakish எல்லைப் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது என்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்.




Add your comments to குவைத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது என்று சற்றுமுன் செய்தி:

« PREV
NEXT »