குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆன்லைன் வினாடி வினா போட்டிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. வருகிற ஜனவரி 3 முதல் 25 வரை அனைத்து வேலை நாட்களிலும் இந்த போட்டி நடைபெறும் கேள்விகள் இந்திய சட்டங்கள்,ஆறுகள்,தீவுகள், திருவிழாக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஆகியவற்றை குறித்து போட்டிகள் நடைபெறும்.
கூகிள் படிவ வடிவமைப்பில்(Google Form Format) உள்ள கேள்வித்தாள்கள் அந்தந்த நாட்களில் நண்பகலில் தூதரகத்தின் சமூக ஊடக கணக்குகள் மூலம் வெளியிடப்படும். இந்த போட்டி குவைத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் மற்றும் இந்தியாவை நேசிக்கும் யாராக இருந்தாலும் கலந்து கொள்ளலாம்.
இந்திய தூதரகம் ஏற்பாடு செய்யும் விழாவில் வைத்து வெற்றியாளர்கள் கவுரவிக்க பாடுவார்கள் மற்றும் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று இந்திய தூதரகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.